சீன வீரர்கள் மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள்!!

புதன் அக்டோபர் 14, 2020

போருக்கு தயாராக இருக்கும் படி சீன வீரர்களை அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பின்ங் கேட்டுக்கொண்டுள்ளதாக சிஎன்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

குவங்டாங் நகரில் உள்ள ராணுவ தளம் சென்ற ஜி ஜின்பிங் வீரர்கள் மத்தியில் பேசும் போது, சீன வீரர்கள் "மனதையும் சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள்.  

மேலும்,அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்று பேசியதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது.

லடாக் விவகாரத்தில் இந்தியா-சீனா இடையே பதற்றம் தணியாத நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளார்.  

தென் சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அண்டை நாடுகளுடன் மோதலைக் சீனா கையாண்டு வரும் நிலையில், ஜி ஜின்பிங் இவ்வாறு பேசியுள்ளது உலக அரங்கில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.