சாதாரண தர பரீட்சாத்திகளுக்கு தற்காலிக அடையாள அட்டை!

செவ்வாய் நவம்பர் 19, 2019

எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சாத்திகளில் இதுவரை அடையாள அட்டைகள் கிடைக்கப்பெறாத 65,000  பரீட்சாத்திகளுக்கு தற்காலிக அடையாள பத்திரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் 10,000 பேருக்கு தற்காலிக அடையாள பத்திரம் இன்றும் நாளையும் அனுப்பி வைக்கப்படும் என  ஆட்பதிவு திணைக்கள பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தற்காலிக அடையாள பத்திரங்கள் பரீட்சாத்தியின் புகைப்படம், மற்றும்  அடையாள  அட்டை உள்ளிட்ட தரவுகளை உரிய பொறுப்பாளரின் கையொப்பத்துடன்  பரீட்சாத்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.