ஆயுர்வேதம் கொரோனாவை குணப்படுத்துமா?

திங்கள் அக்டோபர் 05, 2020

கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு, ஆயுர்வேத முறைப்படி தரப்படும் சிகிச்சை பலனளிப்பதாக,ஒரு விரிவான சோதனையின் இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.

வடோதரா,சிறீகாகுளம் மற்றும் புனே ஆகிய நகர்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்திய மருத்துவ பரிசோதனை பதிவகத்தின் அங்கீகாரத்துடன் ஆய்வுகள் நடந்து வருகின்றன.ஆயுர்வேதம் மற்றும் 'நியூட்ராசூட்டிகல்' எனப்படும் உணவு மருந்து முறையும் கலந்த கூட்டு சிகிச்சை மூலம் கொரோனா நோயாளிகள் சற்று விரைவில் குணமடையலாம் என, இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு இயற்கை மருந்துகளை தந்தபோது, அவர்களில், 86 சதவீதம் பேரின் உடலில்,ஐந்தாவது நாளிலேயே கொரோனா கிருமிகள் இல்லை என்ற முடிவுகள் கிடைத்தன.

இதுவே, அலோபதி சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளிகளில், 60 சதவீதம் பேருக்கே அத்தகைய முடிவுகள் கிடைத்தன.இதனால், ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருந்துகள் மூலம் சிகிச்சை தருவது மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இருக்கும் தட்டுப்பாட்டை குறைக்க உதவும் என்று தெரிய வந்துள்ளது.