ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் வழிபாடும்!

வெள்ளி நவம்பர் 15, 2019

வணக்கம்.
அன்புடையீர்.

மாவீரர் மாதமான  கார்த்திகை மாதத்தை  முன்னிட்டு, மாவீரர்  வாரத் தொடக்க நாளான  கார்த்திகை 20.11.19 முதல் 27. 11.19 வரை தமது மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று, ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளையும், பூசை வழிபாடுகளையும் மேற்கொள்ளுமாறு, கனடா வாழ்  ஈழத்  தமிழ்  மக்களைக் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கேட்டுக்; கொள்கின்றது.

மண்ணுக்காகவும்,  மக்களுக்காகவும் தமது  இளைய இன்னுயிர்களை  ஈகம் செய்த  மாவீரர்களுக்காகவும். ஈழ விடுதலைப்  போரில் மரணமடைந்த அனைத்து மக்களின்  ஆத்ம சாந்திக்காகவும்,  தாயகத்தில் இன்றுவரை துயர்  சுமந்து  வாழும்  எமது  உறவுகளின்  நல்வாழ்வுக்காகவும்,   ஆலயங்களுக்குச்  சென்று  பிரார்த்தனை செய்யுமாறு அனைத்துத்  தமிழ்  மக்களையும் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் கேட்டுக் கொள்கின்றது.

 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
தொடர்பு  இலக்கம்:  647 619 3619.