அதிகாலையில் நடந்த கோர விபத்து

சனி அக்டோபர் 17, 2020

உத்தர பிரதேசத்தின் பிலிபிட் மவட்டத்தில் இன்று அதிகாலையில் நிழ்ந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் மாவட்டம், புரன்பூர் பகுதியில் பேருந்தும் சொகுசு காரும் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சொகுசு கார் கடுமையாக சேதம் அடைந்தது.

இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 32 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

லக்னோ நோக்கி சென்ற அந்த பேருந்தில் சுமார் 40 பேரும், சொகுசு காரில் 10  பேரும் பயணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.