அண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார்!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

நீதிமன்ற அனுமதியுடன் அண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார் என்று மதுரையில் வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சென்னையில் நடை பெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனால் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிய வில்லை.

நீதிமன்றத்தை நாடி கோர்ட்டு அனுமதியின் பேரில் பரூக் அப்துல்லாவை சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைப்பேன்.

பரூக் அப்துல்லா

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சென்னையில் உள்ள கிறிஸ்தவ கல்லூரி பற்றி அவரின் தனிப்பட்ட கருத்தை பேசி உள்ளார். இது வருத்தம் அளிக்கிறது. அவரது கருத்து நீதிபதிகள் தங்கள் எல்லைக்குள் பேச வேண்டும் என்ற நிலையை மாற்றியிருக்கிறது. மேற்கண்டவாறு அவர் கூறினார்.