அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எத்தியோப்பியா அதிபர்

செவ்வாய் டிசம்பர் 10, 2019

ஒஸ்லோ நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.

மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கடந்த அக்டோபர் 11-ம் திகதி அறிவிக்கப்பட்டது. அதில் எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி (43) அமைதிக்கான நோபல் பரிசுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எத்தியோப்பியாவின் நான்காவது பிரதமராக கடந்த 2-4-2018 அன்று பொறுப்பேற்ற அபி அஹமது அலி அண்டைநாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்தவும், ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஒஸ்லோ-வில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுக்கொண்டார்.