ஐ.தே.க பிரதித் தலைவர் விகாரையில் வழிபாடு

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ருவான் விஜயவர்தன, சமய வழிபாடுகளுக்காக ஹுணுப்பிட்டிய கங்காரம விகாரைக்கு இன்று (15) வருகை தந்திருந்தார்.

சமய வழிபாடுகளை அடுத்து, கங்காராம விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய கிரிந்தே அஸ்சஜி தேரர் தலைமையில் பிரித் நிகழ்வு நடைபெற்றுள்ளது.