9 மாத கர்ப்பிணியை கொன்ற கணவன்?: பொலிசார் தீவிர விசாரணை

April 10, 2017

னடா நாட்டில் 9 மாத கர்ப்பிணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவருடைய கணவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Nicholas Tyler Baig(25) மற்றூம் Arianna Goberdhan(27) என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர்.

காதலர்களான இருவரும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், தம்பதி இருவருக்கும் சமீப நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று பொலிசாருக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது அங்கு Arianna Goberdhan உயிரிழந்து சடலமாக கிடந்துள்ளார்.

மேலும், அவர் உயிரிழந்தபோது 9 மாத கர்ப்பமாக இருந்ததாகவும், வயிற்றிலேயே குழந்தையும் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வீட்டில் அவரது கணவர் இல்லாமல் இருந்தது பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், கணவரை தொடர்புக்கொள்ளவும் முடியவில்லை.

இந்நிலையில், Markham நகரில் உள்ள வீடு ஒன்றில் கணவர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பொலிசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்துள்ளனர்.

மனைவி கொலையான சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய கணவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடா