50 ஆண்டுகள் தாமதமாக விநியோகிக்கப்பட்ட கடிதம்! எந்த நாட்டில் தெரியுமா?

October 23, 2016

அவுஸ்திரேலியாவின் தபால் துறை ஐம்பது ஆண்டுகள் தாமதமாக கடிதம் ஒன்றை உரியவரிடம் கொண்டு சேர்த்துள்ள சம்பவம் பிரபலமடைந்துள்ளது.

கடந்த 1966ம் ஆண்டு தெற்கு பசிபிக் தீவில் உள்ள டஹிடியில் கிறிஸ் என்பவரிடம் இருந்து தெற்கு அவுஸ்திரேலியாவில் அடிலெய்டில் ராபர்ட் ஜியோர்ஜியோ என்பவருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு பின் அவுஸ்திரேலியா தபால் துறை குறித்த கடிதத்தை உரியவரிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளது.

இது குறித்து அவுஸ்திரேலிய தபால் துறையின் செய்திதொடர்பாளர் கூறுகையில்,

சரியான நேரத்தில் பாதுகாப்பான மற்றும் திறமையான முறையில் விநியோகம் செய்யும் பெருமை பெற்றது அவுஸ்திரேலிய தபால் துறை. இது போன்ற தவறு நடப்பது மிக அரிதான நிகழ்வே என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்பதாகவும் தபால்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா