5 பவுண்ட் நோட்டை ரூ.1 கோடிக்கு வாங்கிய நபர்: அப்படி என்ன ஸ்பெஷல்?

March 13, 2017

பிரித்தானிய நாட்டில் 5 பவுண்ட் நோட்டை நபர் ஒருவர் ரூ.1 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Shropshire என்ற நகரை சேர்ந்த நபர் தான் இந்த 5 பவுண்ட் நோட்டை அபாரமான விலைக்கு விற்பனை செய்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தன்னிடம் இருந்த பவுண்ட் தாள்களை பார்த்தபோது அவற்றில் ஒரு 5 பவுண்ட் தாள் மிகவும் அரிதான ஒன்றாக இருப்பதை அறிந்து அதனை விற்பனை செய்ய தீர்மானித்துள்ளார்.

பின்னர் ஓன்லைன் விற்பனை தளமான eBay-இல் அந்த 5 பவுண்ட் தாளை விற்பனைக்கு விளம்பரம் கொடுத்துள்ளார்.

இந்த நோட்டை வாங்குவதற்கு 21 பேர் மத்தியில் கடும் போட்டி நிலவி வந்துள்ளது. இறுதியாக, இந்த நோட்டை நபர் ஒருவர் 60,100 பவுண்ட்(1,10,18,765 இலங்கை ரூபாய்) விலைக்கு வாங்கியுள்ளார்.

5 பவுண்ட் நோட்டில் AA01 444444 என்ற அரிதான சீரியல் எண் இருந்ததே இவ்வளவு விலைக்கு காரணமாகும்.

எனினும், இந்த தாளை யார் வாங்கினார்கள் என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதுபோன்ற சீரியல் எண்கள் உள்ள தாள்கள் மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இதனை அதிக விலைக்கு வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் இன்று பலரிடமும் உள்ளது.

இதுபோன்று, AA01 000001 சீரியல் எண் கொண்ட பவுண்ட் தாளை நபர் ஒருவர் பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 

ஐரோப்பா