3 உலகக்கிண்ணங்களை வென்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சாதனை

April 04, 2016

ஒரே ஆண்டில் மொத்தமாக 3 உலகக்கிண்ணங்களை வென்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளன. 6 ஆவது உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள்.

மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் அணியும் அவுஸ்திரேலியா பெண்கள் அணியும் மோதிய டி20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் அணி முதல் முறையாக உலகக்கிண்ணத்தை வென்று சாதனைப்படைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் வென்றது. இந்த வெற்றிகள் மூலம் ஒரே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகள் மொத்தமாக 3 உலகக்கிண்ணங்களை வென்றுள்ளன.

இந்த சாதனையானது மேற்கிந்தியத் தீவில் மீண்டும் கிரிக்கெட் விளையாட்டு உத்வேகம் பெற உதவும் என்று அணித் தலைவர் டேரன் செமி தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு இதே டேரன் செமி தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

 

பலதும் பத்து