21 ஆம் நூற்றாண்டில் நடந்த முதல் இன அழிப்பு: சரித்திரத்தில் எழுதப்படவேண்டும்!

செவ்வாய் மே 19, 2020

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவைப் பொறுப்பாளர் திரு. திருச்சோதி அவர்கள் இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து ஈழமுரசு இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல் இது.

- சந்திப்பு: கந்தரதன்

இன்றைய நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரான்சில் எவ்வாறு இருக்கின்றது?

மே 18 நினைவேந்தல் என்பது, ஓர் இனத்தால் ஒரு பூர்வீகக் குடிகளால் மறக்கமுடியாத ஒரு விடயம். இலங்கையின் பூர்வீகக் குடிகளாகிய நாங்கள், காலந்தொட்டு ஓர் அழிவுக்குள்ளாகிக்கொண்டு போகின்றோம். இது இன்று நேற்றல்ல காலனித்துவக் காலத்தில்கூட எமது அடையாளங்கள் மூன்று பேரால் அழிக்கப்பட்டன. முக்கியமாக தென்னிலங்கையில் உள்ள அதாவது தென்முனையில் இருந்த ஒரு சிவ ஆலயம்  தான்தோன்றீஸ்வரர் என்று சொல்லப்படுகின்ற இந்த ஆலயம் இல்லாமல் ஆக்கப்பட்டது. அதாவது இலங்கை முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள். ஈழத் தமிழர்களின் பூர்வீகமே இலங்கை என்ற அடையாளத்தை அழிப்பதற்காக காலந்தொட்டு பலவிதமான சந்தர்ப்பத்தில் பலவிதமான நாடுகள், பலவிதமான செயல்களில் ஈடுபட்டன. அது 1917 இல் தமிழ்பேசும் இஸ்லாமியர்கள் பொருளாதார ரீதியில் கை ஓங்கி நிற்கின்றார்கள் என்று அவர்களுக்கெதிராக ஓர் இனத்தை நோக்கிப் பேரினவாதிகளால் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும்....