20 ஆவது திருத்தம் தமிழ் மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது - தமிழினத் துரோகி டக்ளஸ் 

சனி அக்டோபர் 17, 2020

சிறிலங்கா அரசாங்கத்தின் 20 ஆவது திருத்தச் சட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எவ்விதமான பாதிப்புக்களையும் ஏற்படப்போவதில்லை என தமிழினத் துரோகி, ஒட்டுக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவானந்தா கனேடிய தூதுவருக்கு தெரிவித்துள்ளார். 

13 ஆவது திருத்தத்தை சரியாக கையாள்வதே தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்பம் எனவும் அவர் கூறியுள்ளார்.  

மாளிகாவத்தையிலுள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மைக்கினனுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கமைய அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி வருவதாகவும், உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கமைய அரசியலமைப்பில் இத் திருத்தச் சட்டம் உள்வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தென்னிலங்கை மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட போதிலும், தற்போது முழுநாட்டு மக்களினதும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் செயற்பட்டு வருகின்றது. 

தமிழ் மக்களின் மத நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் நவராத்திரி விழாவை கொண்டாடுவதற்கு அண்மையில் அரசாங்கத்தினால் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமையையும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு டக்ளஸ் சுட்டிக் காட்டினாராம். 

யுத்த காலத்திலும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்திவரும் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களை சிங்கள அரசிடம் அடகுவைக்கும் வேலையை தொடர்ந்து செய்துவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.