17 வயது இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன் : ஏன்? அதிர்ச்சி சம்பவம்

March 07, 2017

மெக்சிகோவில் 17 வயது பள்ளி மாணவியை இளைஞன் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

மெக்சிகோ நாட்டில் வசித்து வருபவர் Naomi Tilahun (17) இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்னர் மாலை 4 மணி அளவில் Naomi பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் வந்த ஒரு இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் Naomiவை குத்தி விட்டு தப்பி ஓடியுள்ளான்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த Naomiவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் அவர் பலனில்லாமல் உயிரிழந்துள்ளார்.

இதனிடையில், குற்றவாளியை தேடி வரும் பொலிசாருக்கு, மாணவி Naomiஐ குற்றவாளி கடந்த ஒரு வருடமாகவே பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

 

 

 

உலகம்