153 தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் நியமனம்!

வியாழன் பெப்ரவரி 27, 2020

தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இடம்பெற்ற நேர்முகப்பரீட்சைகளுக்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவின் கல்வி சேவை குழுவின் அனுமதியுடன் 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நாட்டு பாடசாலை அமைப்பினுள் தற்போது 373 தேசிய பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், அதில் 278 பாடசாலைகளுக்கு உரிய தரத்தினை கொண்ட அதிபர்கள் நியமிக்கப்படவில்லை.

அதன்படி, தேசிய பாடசாலைகளுக்காக அதிபர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சைகளுக்கு அமைய பொது சேவை ஆணைக்குழுவின் கல்விச் சேவை குழுவின் அனுமதியுடன் 153 அதிபர்களை இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைய இந்த அதிபர்களுக்கான பாடசாலைகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 25 ஆம் திகதி கல்வி அமைச்சில் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ அழகப்பெருமவினால் இதற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, வெற்றிடம் ஏற்பட்டிருந்த 153 பாடசாலைகளுக்காக அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய, கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என்.சித்ரானந்த உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.