144 மில்லியன் ரூபாவும் மிகவிரைவாக பயன்படுத்தவுள்ளோம்!

July 22, 2017

வடமாகாண ஆளுனர் நிதியத்தில் வைப்பில் இருக்கும் 144 மில்லியன் ரூபாவும்  மிகவிரைவாக எனது கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்படவுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் 95 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம் உண்ணாப்புலவுஇறோமன் கத்தோலிக்க தமிழ் கலைவன் பாடசாலையில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்து கருத்துதெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாணத்தில் 14 கோடி ரூபா போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் கணவனை இழந்த பெண்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியை பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நிதி வடமாகாண சபையில் இருக்கின்றது இதனை பயன்படுத்துவதற்கு என்னுடைய கருத்தின் படி கிராமிய வங்கிகளை பலப்படுத்தி அந்த வங்கிகள் ஊடாக குறைந்தளவு வட்டி வீதத்தில் கடன்களை வழங்குவதன் ஊடாக கிராமத்தில் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியும் என்று நம்புகின்றேன். 

இதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஒரு நல்ல செய்தியினை சொல்லி நிக்கின்றேன். இந்திய அரசாங்கத்தின் என்னிடம் கையளிக்கப்பட்டிருக்கின்ற 45 வகையான புலமைப்பரிசில் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கின்றது போரினால் பாதிக்கப்பட்டு மேல் படிப்பிற்கு வசதி இல்லாமல் தட்டுப்பட்டவர்கள் வடமாகாண அமைச்சுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆளுனர் நிதியத்தில் வைப்பில் இருக்கும் 144 மில்லியன் ரூபாவும்  மிகவிரைவாக எனது கண்காணிப்பின் கீழ் பயன்படுத்தப்படவுள்ளதாகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்

ஈழத்தீவு