1000 நாட்கள்!

வெள்ளி நவம்பர் 15, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திவரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம் 1000 நாட்களை எட்டியுள்ளது.

வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் எதிர்வரும் 15ஆம் திகதி 1000 நாட்களை எட்டவுள்ளது. அதற்கு மறுநாளே சிறீலங்காவின் ஜனாதிபதிக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.

கடந்த ஆயிரம் நாள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 40 உறவுகள் தங்களின் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாமலேயே இதுவரை உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் இவர்கள் அவ்வப்போது பாரிய போராட்டங்களையும் முன்னெடுத்தும், இதுவரை சிறீலங்கா தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வெளிவர
வில்லை.

மாறாக இவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, பல்வேறு வெளிநாடுகளின் பிரதிநிதிகளும் நேரில் சென்று சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, கடந்த வாரம் சஜித் பிறேமதாசவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவெடுத்து, தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் முடிவடைந்து வாகனத்தில் சென்ற சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் வாகன தொடரணிக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் தாயயாருவர் செருப்பை கழற்றி எறிய முற்பட்ட போது சிறீலங்காக் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்தனர்.

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முடிவெடுப்பதற்காக கூடியிருந்தது. இதன்போது வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கூட்டம் இடம்பெறும் இடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முற்பட்டபோது காவல்துறையினர் அவர்களை கூட்டம் இடம்பெறும் பகுதிக்கு செல்ல அனுமதிக்க
வில்லை.
இந் நிலையில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது தமிழரசுக்கட்சியின் கூட்டம் முடிவடைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.
சம்பந்தன், எம். ஏ.சுமந்திரன் ஆகியோர் தமது பாதுகாப்பு வாகனத்தொடரணியில் வெளியேறியிருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அதிகளவு காவல்துறையினர் மூலம் வாகனத் தொடரணியை நெருங்காது தடுத்து வைத்திருந்தனர். இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாயயாருவர் தனது செருப்பை கழற்றி வாகனத்தொடரணி மீது எறிய முற்பட்டபோது அவரை அங்கிருந்த காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.

வாகனத் தொடரணி சென்ற பின்னரே அவரை காவல்துறையினர் விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்தத் தாயார் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் சேர்த்து காவல்துறையினரையும் திட்டித் தீர்த்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்பந்தன் நீங்கள் 2015 தேர்தலின்போது வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்டிக்கு உறுதியளித்தீர்கள். இப்போது ஒன்றுபட்ட, ஒருமித்த பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தீர்வு வேண்டும் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள் நீங்கள் ஏன் தமிழர்களிடம் தொடர்ந்து பொய் சொல்னீர்கள்?

ம்பந்தா தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்களிக்க நீங்கள் தமிழர்களை கேட்கவில்லை என்றால் நீங்கள் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்த தகுதியற்றவர்கள் சுமந்திரனே நாடாளுமன்றத்தில் பெளத்தத்துக்கு முதலிடம் யாரை கேட்டு கொடுத்தாய்?

சம்பந்தா இலங்கை ஒரு பெளத்த நாடு என்று மோடிக்கு சொல்வதற்கு தமிழர்கள் உங்களுக்கு அனுமதி தந்தார்களா?

போன்ற பதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், எதிர்வரும் 16ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழர்களின் அரசியல் விருப்பத்தை சர்வஜன வாக்கெடுப்பு மூலம் சர்வ தேசத்துக்கு காட்ட தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா தமிழர்களின் விருப்பத்தை தீர்க்கவேண்டும் என்று தமிழர்கள் விரும்பினால் தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

கோத்தாவும், சஜித்தும் சமஸ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பெளத்த அடிப்படை வாதிகள். இந்த சிங்களவர்களிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

தமிழ் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். தமிழர்களிற்கு எச்சரிக்கை. தந்தையின் மரணத்திற்கு தமிழர்களை பழி தீர்க்க 26 ஆண்டுகளாக காத்திருக்கும் சஜித்.

111

சஜித்தை ஆதரிப்பதற்கு தலா 30 கோடி ரூபா கூட்டமைப்பு எம்பிக்கள் பெற்றுள்ளார்கள். என வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

நன்றி: ஈழமுரசு