விடைபெறும் நேரத்தில் ஒபாமாவை பற்றி சில விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்

January 11, 2017

கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஒபாமாவின் பதவிக்காலம் வருகிற 20 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

இதனை முன்னிட்டு சிகாகோவில் வைத்து ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒபாமா தனது இறுதி உரையை நிகழ்த்தியுள்ளார்.

நாட்டை பற்றியும், தனது பதவி காலத்தில் தான் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் தனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மனைவி, குழந்தைகள் குறித்து ஒபாமா கண்ணீர் மல்க பேசியது நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியது.

இந்த தருணத்தில் ஒபாமாவை பற்றி சில விடயங்களை தெரிந்துகொள்ளுங்கள்,

தான் ஒரு சிறந்த ஜனாதிபதி என்பதை விட சிறந்த மனிதர் என்பதை தான் இந்த உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார். சிறந்த முறையில் நல்லாட்சி வழங்கிய இவர், தனது மனைவிக்கு அன்பான கணவனாகவும், தனது குழந்தைகளுக்கு சிறந்த தந்தையாகவும் இருக்கவே விரும்புவார்.

சீனாவில் OFC என்ற ஒன்று இருக்கிறது. அதாவது ஒபாமா ஃப்ரைட் சிக்கன்.

ஒபாமா பிரித்தானியாவின் முன்னால் பிரதமர் பிரதமர் டேவிட்டை ப்ரோ (Bro) என்று அழைக்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

2012-ல் சோமாலி இஸ்லாமிய போராளி குழு பாரக் ஒபாமாவிற்கு 10 ஒட்டகங்களை பரிசளித்தது.

ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமை அல்லது ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற வார்த்தையை தன் உரையில் சேர்த்து பேசிய முதல் அமெரிக்க ஜனாதிபதி.

1961-ல் ராபர்ட். எப். கென்னடி நாற்பது வருடத்தில் அமெரிக்காவிற்கு ஒரு கருப்பு ஜனாதிபதி கிடைப்பார் என கூறினார். அதே போல ஒபாமா அமெரிக்காவின் ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதியாக இருக்கும்போதே, அகாடமிக் பேப்பர் பப்ளிஷ் செய்த முதல் ஜனாதிபதி ஆவார்.

பாரக் ஒபாமா ஹாரி பாட்டர்-ன் அனைத்து புத்தகங்களையும் முழுவதுமாக படித்துள்ளார்.

2016- வரையிலும் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களை கொண்டிருந்த உலக தலைவர்களுள் முதல் இடத்தை பெற்றிருந்தவர் பாரக் ஒபாமா தான்.

கனடா