வாழ்க்கையை வெறுப்பவர்கள் இந்தக் காட்சியை கட்டாயம் காணவும்!!!

August 10, 2016

இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்தவர் டியோ சாட்ரியோ ( வயது 11 ) இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது திறமையால் அசத்தி வருகிறார்.

கை,கால்கள் இல்லாவிடாலும் சிறுவன் பாடசாலைக்குச் சென்று தன் கல்விகளை தொடர்கின்றார். இது குறித்து சாட்ரியோவின் தாயார் கூறும் போது, நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை, கால்கள் கைகள் மாத்திரமே இல்லை.

ஆனால் தன் மகன் திறமையானவன். மற்றைய குழந்தைகள் போல் சாதாரணமாகவே இருக்கின்றான். அவருக்கு கணித பாடத்தில் அதிகம் ஆர்வம் இருப்பதாகவும், சிறந்த நுண்ணறிவு கொண்டவன் எனவும் தெரிவித்துள்ளார்.

மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் நிதிகளை வழங்கி உதவி செய்து வருவதாகவும் அவரின் தாயார் கூறியுள்ளார். மேலும், பாடசாலை நிறைவடைந்ததும் சக மாணவர்களுடன் இணைந்து விளையாடுவான் என்றும் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவன் என்றும் அவரது தாய் கூறியுள்ளார்.

அதேவேளை இவர் தன் வாய் மூலமே எழுதுவார் என்றும் சிறந்த திறமைசாலி எனவும் பாடசாலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

 

Videos: 
காணொளி / ஒலி