வவுனியாவில் வாள்வெட்டு, 2 பேர் வைத்தியசாலையில்!

July 23, 2017

வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் மீது குறித்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஈழத்தீவு