வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாலியல் தொழிலாளியான இளம்பெண்

March 01, 2017

பிரேசில் நாட்டில் வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்விட்டு பாலியல் தொழிலாளியாக மாறியுள்ள இளம்பெண் ஒருவர் கோடிக்கணக்கான பணம் ஈட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பிரேசில் தலைநகரான Brasilia நகரில் Claudia De Marchi(34) என்ற இளம்பெண் வசித்து வருகிறார்.

கடந்த 2005-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்த இவர் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், இப்பணியில் அவரால் போதிய வருமானம் ஈட்டவில்லை.

பின்னர், நீதித்துறையில் நுழைந்த இவர் வழக்கறிஞராக கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.

ஆனால், இத்துறையில் ஆணாதிக்கம் அதிகமாகவும், வருமானம் குறைவாகவும் இருந்ததால் இப்பணியிலும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை.

தன்னுடைய நிலையை தாயிடம் எடுத்துக் கூறி ‘வழக்கறிஞர் பணியை ராஜினாமா செய்துவிட்டு பாலியல் தொழிலாளியாக மாறப்போகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

மகளின் முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடையாத தாயார் ‘உன்னால் எந்த தொழிலில் அதிக வருமானம் ஈட்ட முடியுமோ அந்த தொழிலில் கவனம் செலுத்து’ என சம்மதம் வழங்கியுள்ளார்.

தாயாரின் சம்மதம் கிடைத்தவுடன் கடந்த ஓராண்டாக முழு நேர பாலியல் தொழிலாளியாக மாறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, ‘வழக்கறிஞர் பணியை விட இந்த பாலியல் தொழிலில் எனக்கு அதிக வருமானம் கிடைக்கிறது.

இருப்பினும், பணம் உள்ள அனைவரிடம் நான் செல்வதில்லை. நன்கு படித்த சமுதாயத்தில் கோடீஸ்வரர்களாக இருக்கும் நபர்களை மட்டுமே நான் வாடிக்கையாளராக அனுமதிக்கிறேன்.

ஒரு மணி நேரத்திற்கு 150 பவுண்ட் எனவும், ஓர் இரவுக்கு மட்டும் 650 டொலர்(98,397 இலங்கை ரூபாய்) வருமானம் ஈட்டுகிறேன்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 1,00,000 பவுண்ட்(1,86,92,514 இலங்கை ரூபாய்) வருமானம் இத்தொழிலில் கிடைத்துள்ளது.

வழக்கறிஞர் பணியை விட இந்த தொழில் எனக்கு திருப்தியாக இருக்கிறது’ என Claudia De Marchi உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

உலகம்