வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக ஜெயசேகரம்!

August 02, 2017

வட மாகாணசபையின் புதிய உறுப்பினராக தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்.வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்று மாலை 4.30 மணிக்கு யாழ்.வணிகர் கழகத்தின் அலுவலகத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி V.T. சிவலிங்கம் முன்னிலையில் பதவிப்பிரமாண நிகழ்வு நடைபெற்றது.

இன் நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன், அ.பரஞ்சோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈழத்தீவு