வடகுக்கான எரிபொருள் விநியோக மையம் இராணுவக்கட்டுபாட்டில்

July 26, 2017

வவுனியாவிலுள்ள வடபகுதிக்கான பிரதான எரிபொருள் விநியோக நிலையத்தினை இன்று காலை படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பொறுப்பேற்றுள்ளனர்.இதையடுத்து தடைப்பட்டிருந்த எரிபொருள் விநியோகம் இனி வழமையாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், அத்தியவசிய சேவை ஒன்று பிரகடனப்படுத்தப்படுமிடத்து, உரிய சேவை தொடர்பில் பணிக்கு திரும்பாதோர், பணியிலிருந்து தானாக நீங்கிச் சென்றதாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அவ்வாறே, எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் வழமைக்கு கொண்டு வந்துள்ளதால், குறித்த சேவை மற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் பவுசர்களை, உரிய எரிபொருள் களஞ்சியத்திற்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், குறித்த பணியில் ஈடுபடாத தனியார் பவுசர்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன கம்பனிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு மற்றும் ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய ஊழியர்களின் சங்கத்தினால் நேற்று நள்ளிரவு முதல் பணிப் புறக்கணிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

 

 

ஈழத்தீவு