வங்காளதேசத்தில் கன மழையால் நிலச்சரிவு- 53 பேர் பலி!

June 13, 2017

வங்காளதேச நாட்டின் வடகிழக்கு பகுதியில் இடைவிடாது கொட்டி வரும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 2 ராணுவ அதிகாரிகள் உட்பட 53 பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவுகளில் சிக்கியவர்கள் பலர் இன்னும் மீட்கப்படாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

 

அதிகபட்சமாக ரங்கமாதி மலை மாவட்டத்தில் 36 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது ரங்கமாதி பகுதியில் இரண்டு ராணுவ அதிகாரிகள் பலியாகியுள்ளனர். 

மேலும் சில ராணுவ வீரர்கள் காயம்  அடைந்துள்ளனர். நிலச்சரிவில்  பல இடங்களில் போக்குவரத்து முடங்கியுள்ளது.  மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடியின இனத்தவர்கள்தான் பெரும்பாலும் நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர். பல மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது

உலகம்