லண்டன் பள்ளிவாயலுக்கு அருகில் வேன் மோதி ஒருவர் பலி, 8 பேர் காயம்!

June 19, 2017

லண்டன் நகரின் பின்ஸ்பெரி பார்க் அருகிலுள்ள முஸ்லிம்களின் பள்ளிவாயல் ஒன்றின் அருகில்  சனநெரிசல் உள்ள நேரத்தில் வேன் ஒன்று மக்களின் மீது செலுத்தப்பட்டதில் ஒருவர் இறந்துள்ளதாகவும், 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

லண்டனின் வடக்கு பிரதேசத்திலுள்ள ஒரு நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டன் நேரப்படி திங்கள்(19) அதிகாலை 12.20 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 48 வயதுடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்றவுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவசர சேவையை நடைமுறைப்படுத்தி உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் கடந்த 03 ஆம் திகதி லண்டன் பிரிஜ் வாகன தாக்குதல் சம்பவம் ஒன்றில் 8 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

உலகம்