யாழில் 5 நிமிடம் நடைபெற்ற துப்பாக்கி சண்டை!

July 22, 2017

யாழ் நல்லூர் பகுதியில் யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். .

இன்று மாலை வழமையாக யாழ்ப்பாணம் கோவில் வீதியால் சென்று வருவது வளக்கம் இன்று மாலையும் நாங்கள் சென்றோம் 
இளஞ்செழியனின் வாகனத்தை ஓட்டிய சாரதியின் தகவல்களின் படி  முன்னால் மெய்பாதுகாவலரான கேமசந்திர (வயது 51 ) மோட்டார் வண்டியில் பாதுகாப்பிற்காக சென்றுகொண்டிருந்தார்  வண்டியினுள் நானும் ஐயாவும் மற்றய பாதுகாவலரான விமலசிறி ( வயது 51) இருந்தோம்.

நல்லூர் பின்வீதியை ஆண்மித்த வேளை எமக்கு முன் சென்ற  கேமசந்திர உடன் ஒருவர் முரண்படுவது போல தோன்றியது.இதை அவதானித்த ஐயா வண்டியை நிறுத்துமாறு கட்டளையிட்டார்.நானும் ஓரமாக வண்டியை நிறுத்தமுதல் கேமசந்திர உடன் முரன்பட்டவர் அவரது துப்பாக்கியை பறித்து முதுகு வயிற்று பக்கமாக சுட்டார்.இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.வண்டியை நான் நிறுத்துவதற்குள் அருகிலிருந்த பொலிசாரும் ஐயாவும் அவனை நோக்கி ஓடினர்.இதன்போது விமலசிறி அவான்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.அவன் பதிலுக்கு சுட்டதில் வீமலசிறிக்கு கையில் சூடு பட்டது.

விபரீதத்தை உணர்ந்த நான் உடனடியாக ஐயாவின் உதவியோடு காயம்பட்ட இருவரையும் தூக்கி வண்டியில் போட்டு வைத்தியசாலை வந்தேன்.வரும்போது அவன் துப்பாக்கியை எறிந்துவிட்டு நொண்டி நொண்டி போவதை அவதானித்தேன் என்று சாரதிதெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பவம்  நீதித்துறைக்கு விடப்படும் சாவல் கருதுகின்றேன் என மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நடைபெறும் வழக்குகள் உயிர் அச்சுறுத்தல் தொடர்பான வழக்குகள் எனது பாதுகாப்பு பொலீஸ் உத்தியோகத்தரை ஒருதருக்கும் தெரியாது  இது குறித்து பாதுகாப்பு அமைச்சும் பொலீஸ் தலைமையகமும் உடனடி விசாரணையில் ஈடுபடவேண்டும்.
 

ஈழத்தீவு