யாழில் 125 சிங்கள தொண்டர் ஆசிரியர்களை நியமனம் வழங்குமாறு கோரிக்கை!

August 02, 2017

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடமாகாண 125 சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் சார்பாக 37 ஆசிரியர் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தனர்.

இவர்கள் தமக்கான நிரந்தர நியமனம் வழங்கக் கோரி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தனர். முதல்வர் இரு நாள்களில் பதிலளிக்கப்படும் என அவர்களிடம் தெரிவித்தார்.

பின்னர்  37 சிங்கள தொண்டர் ஆசிரியர்களும் இன்றைய தினம் கல்வி அமைச்சின் அலுவலகம் மற்றும் ஆளுநர் அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈழத்தீவு