மைக்ரோசொஃப்ட் தனிப்பயிற்சிகளை இலங்கையிலும் ஆரம்பித்துள்ளது

January 24, 2016

உல­க­ளா­விய ரீதியில் காணப்­படும் இளை­ஞர்­க­ளுக்கு கணினி விஞ்­ஞா­னத்தை அறி­மு­கப்­ப­டுத்தும் வகையில், உல­க­ளா­விய ரீதியில் மைக்­ரோசொஃப்ட் அறி­முகம் செய்­தி­ருந்த ‘Hour of Code’ தனிப்­ப­யிற்­சி­களை இலங்­கை­யிலும் ஆரம்­பித்­துள்­ளது.

முதற்­கட்­ட­மாக இந்த தனிப்­ப­யிற்சி, 100க்கும் அதி­க­மான மாண­வர்­க­ளுக்­காக அலரி மாளி­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. கணினி விஞ்­ஞா­னத்­துக்­கான அறி­முகத் திட்­ட­மாக ‘Hour of Code’ அமைந்­துள்­ளது. coding இன் முக்­கி­யத்­துவம் மற்றும் அவற்றின் அடிப்­ப­டை­களை சிறு­வர்­க­ளுக்கு விளங்­க­வைக்கும் வகையில் அமைந்­துள்­ளது.

இவ்­வாரம் முழு­வதும், உல­க­ளா­விய ரீதியில் மைக்­கு­ரோசொஃப்ட் பயிற்­சிப்­பட்­ட­றை­களை முன்­னெ­டுக்கும், ஆயிரக் கணக்­கான சிறு­வர்­க­ளுக்கு Minecraft coding தனிப்­ப­யிற்­சி­களை அறி­முகம் செய்­ய­வுள்­ளது. 2015 டிசம்பர் 7ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை கணினி விஞ்­ஞான அறிவு வார­மாக பிர­க­டனம் செய்­தி­ருந்­தது.

code.org உட­னான பங்­காண்­மையின் மூல­மாக விருத்தி செய்­யப்­பட்­டுள்ள Minecraft coding தனிப்­ப­யிற்­சிகள் மூல­மாக, பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு கணினி விஞ்­ஞா­னத்தின் அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் வழங்கப்படவுள்ளதுடன், மகிழ்ச்சியூட்டும் கேமிங் சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.

 

பலதும் பத்து