முல்லைத்தீவு இ.போ.ச பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பாரிய தீவிபத்து!

July 21, 2017

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து தரிப்பிடத்திற்கு   அருகில் உள்ள காணிகளுக்கு வைக்கப்பட்ட தீ பனைமரங்களை எரித்துக்கொண்டு டிப்போ வளகாத்திற்கு நோக்கி எரிந்து சென்றபோது அதில் உள்ளவர்களினால் அணைக்கப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து தரிப்பிடத்திற்கு ஏற்படவிருந்த பாரிய தீவிபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் மற்றும் காணி உரிமையாளர்கள் தங்கள்  காணிகளை சீர்செய்து தீவைத்து வருகின்றார்கள் அண்மையில் கூழாமுறிப்பிலும் தீவைக்கப்பட்டுள்ளது வற்றாப்பளை பகுதியிலும் காணிக்கு வைக்கப்பட்ட தீ வீட்டில் பற்றிக்கொண்டு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது முல்லைத்தீவு 3 ஆம் கட்டை பகுதியிலும் எரிந்து போயுள்ள வயல் நிலங்களுக்கு உரிமையாளர்கள் தீவைத்துள்ளார்கள்,கேப்பாபிலவு,மற்றும் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பு பகுதிகளிலும் காணிகளை சீர்செய்து தீவைத்து வருகின்றார்கள் அதிகளவான வெப்பம் மற்றும் காற்று காரணமாக இந்த தீ பரவிசேதத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஈழத்தீவு