முல்லைத்தீவில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் தகர்த்து அழிப்பு!

July 26, 2017

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள தனிநபர் ஒருவாரின் காணிஒன்றின் கிணற்றுக்குள் மிதிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள் காணப்படுவதாக பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்மு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இந்த வெடிபொருட்களை அழிக்கும்படி சிறப்பு அதிரடிப்படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியானநிலையினால் கிணற்றில் நீர்வற்றி காணப்பட்டுள்ளதை தொடர்ந்து இதனை கருத்தில் கொண்டு கிளிநொச்சியில் இருந்து சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் முல்லைத்தீவு பொலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் உள்ள வெடிபொருட்களை எடுத்து பாதுகாப்பான இடத்தில் வைத்து தகர்த்து அழித்துள்ளார்கள்.

இதன்போது  22 மிதிவெடிகள்,துப்பாக்கி ரவைகள் 789, வெடிப்பி-43,வெடிமருந்து 1கிலோக்கிரம் என்பன மீட்டு அழிக்கப்பட்டுள்ளது.

ஈழத்தீவு