மார்ச்சில் வெளியாகும் விக்ரமின் அடுத்த படம்!

February 04, 2016

’10 எண்றதுக்குள்ள’ படத்தை அடுத்து விக்ரம் தற்போது ‘இருமுகன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘அரிமாநம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக மலேசியாவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தையடுத்து விக்ரம், திரு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாக இயக்குனர் திரு தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் விக்ரம் ஜோடியாக முதல் முறையாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சினிமா