மட்டக்களப்பு - ஆயித்தியமலை கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்பு

April 06, 2018

மட்டக்களப்பு - ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெல்லூர் கிராமத்தில் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று நெல்லூர் பாடசாலை வீதியைச் சேர்ந்த மகிழவெட்டுவான் வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கற்கும் 16 வயதான  சிவலிங்கம் திஷாந்தினி  என்ற பாடசாலை மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சிறுமியின் உடல்,  உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ஈழத்தீவு