போதையில் இருந்த பெண்ணை ஒரே குடும்ப அகதிகள் கூட்டாக கற்பழித்த கொடூரம்

February 24, 2017

ஆஸ்திரியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் இளம்பெண்ணை கற்பழித்துள்ள வழக்கில் அவர்கள் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

ஆஸ்திரியா நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் 28 வயதுடைய இளம்பெண் தன் தோழியுடன் மது அருந்த பாருக்கு சென்றுள்ளார்.

அங்கு ஈராக் நாட்டிலிருந்து ஆஸ்திரியாவில் தங்கியிருக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 அகதிகள் வந்துள்ளனர்.

அந்த பெண்ணுடன் அகதிகளில் 4 பேர் பேச்சு கொடுத்து நட்பாகியுள்ளனர். போதையில் இருந்த பெண்ணுக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தன் வீட்டுக்கு கிளம்பியுள்ளார்.

இந்த அகதிகளும் அவர் பின்னால் அவர் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் நிர்வாணமாக இருந்த அந்த பெண்ணை ஒருவர் பின் ஒருவராக அவர்கள் கற்பழித்துள்ளனர்.

இதுகுறித்து பொலிசுக்கு புகார் அளிக்கப்பட்டதன் மூலம் இரு வருடங்களாக இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

தற்போது DNA சோதனை மூலம் 9 பேரில் 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மீதி 4 பேர் நிலுவையில் உள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தற்போது மனநோய் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

உலகம்