பேஸ்புக் நேரலையில் முதியவரை படுகொலை செய்த கொடூரன்: 13 பேரை கொன்றதாக வாக்குமூலம்

April 17, 2017

அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் முதியவர் ஒருவரை கொலை செய்துவிட்டு மேலும் 13 பேரை கொன்றதாக வாக்குமூலம் அளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று பேஸ்புக்கில் உலாவிக் கொண்டிருந்த அமெரிக்க மக்களுக்கு கடும் அதிர்ச்சியைத் தந்தது அந்த சம்பவம்.

ஈஸ்டர் தின பலி என தலைப்பிடப்பட்டு, வயதான நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் ஒருவர், அதனை பேஸ்புக்கில் லைவாக ஒளிபரப்பும் செய்து கொண்டிருந்தான்.

இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ குறித்து காவல்துறையினரிடமும் பலரும் தகவல் அளித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில், தனது செல்போன் மூலமாக மீண்டும் பேஸ்புக் லைவுக்கு வந்த அந்த கொலைகாரன், இதே போல ஏற்கனவே 13 கொலைகளை செய்துள்ளதாக தெரிவித்தான்.

மேலும் தன்னை காவல்துறையினர் கைது செய்வதற்குள், இது போன்ற பல கொலைகளை செய்வேன் எனவும் கூறினான். இதனால் அமெரிக்கா முழுவதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் ஸ்டீவ் ஸ்டீபன்ஸ் என்பதும், அவன் சுட்டுக் கொன்ற முதியவரின் பெயர் ராபர்ட் குட்வின் என்பதும் தெரியவந்தது.

ஸ்டீபன்ஸின் இருப்பிடத்தை கண்டறிந்துவிட்டதாகவும், இன்னும் ஒரு நாளில் அவனை கைது செய்துவிடுவோம் எனவும் அமெரிக்க காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

மேலும் குறிப்பிட்ட கொலைகாரன் இதுவரை பிடிபடாத காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 மாநிலத்தில் உள்ள மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கனடா