பெரிய நாக்கு! விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கிண்டல் செய்த தொகுப்பாளர்கள்

October 25, 2016

தனது குழந்தைக்கு இருக்கும் விசித்திர நோயை வைத்து குழந்தையை கிண்டல் செய்த பிரபல ரேடியோ அலைவரிசை தொகுப்பாளர்களுக்கு குழந்தையின் தாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாட்டில் நோவா 96.9 ஏன்னும் பிரபல வானொலி அலைவரிசை சேனல் செயல்பட்டு வருகிறது. இதில் kate Ritchie, Tim Blackwell, Marty Sheargold ஆகியோர் தொகுப்பாளர்களாக உள்ளனர்.

இவர்கள் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது Beckwith-Wiedemann Syndrome என்னும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட 16 மாதங்களே ஆன ஒரு குழந்தையை பற்றி கிண்டல் அடிக்கும் விதத்தில் பேசியுள்ளனர்.

அதாவது அந்த நோயின் பாதிப்பால் Morrison-Johnson என்னும் குழந்தையின் நாக்கானது சாதாரண நாக்கை விட பெரிதாக வாயின் வெளியில் தெரியும் படி இருக்கிறது. இதை தான் அவர்கள் கிண்டல் செய்து பேசியுள்ளனர்.

இந்த செயலுக்கு அந்த குழந்தையின் தாய் Vanessa Whitelaw கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, உங்களில் பலர் என் குழந்தையின் நோய் பாதிப்பு பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவளுக்கு வந்துள்ளது Beckwith-Wiedemann Syndrome என்னும் விசித்திர வியாதியாகும். அதனால் என் குழந்தை சரியாக சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் தவிப்பது எனக்கும் என் கணவருக்கும் தான் தெரியும்.

இப்படி இருக்கும் சமயத்தில் நோவா 96.9 வானொலி தொகுப்பாளர் Kate Ritchie மற்றும் அவர் குழுவினர் என் குழந்தைக்கு வந்திருக்கும் நோயை பற்றி வானொலி நிகழ்ச்சியில் கிண்டல், கேலி செய்திருக்கிறார்கள்.

இது கண்டனத்துக்கு உரியதாகும். ஒருவர் கஷ்டத்தை வைத்து கேலி பண்ண இவர்களுக்கு எப்படி மனசு வருகிறது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த தொகுப்பாளர்களின் இந்த அநாகரீக செயலுக்கு தாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்வதாக நோவா வானொலி நிலையத்தின் தலைமை பொறுப்பில் உள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க்து.

 

அவுஸ்திரேலியா