புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் பலி

April 03, 2018

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு வயோதிபர் ஒருவா் பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் அதே இடத்தினைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய வயோதிபர் ஒருவரே பலியாகியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று இரவு 7 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை புகையிரதம் புங்கன்குளம் புகையிரதம் தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈழத்தீவு