பிரெஞ்சு வாகனச்சாரதிப்பத்திரம் - புதிய கேள்விகள் இணைப்பு

February 17, 2016

பிரெஞ்சு வாகனச் சாரதிப்பத்திரத்திற்கான, வீதி விதிமுறைகளிற்கான பரீட்சைக்கான (épreuve théorique générale)  கேள்விகளின் வங்கிகளில், புதிய ஆயிரம் கேள்விகளிற்கான மாற்றீடு செய்யப்படுகின்றது.

இதில் முக்கியமாக இதுவரை வந்திராத புதிய முன்னூறு கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புகளிற்கான போக்குவரத்து அமைச்சுக்களின் இணைச்செயலாளர் எம்மானுவல் பார்ப் (Emmanuel Barbe) தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைகள், எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி முதல் அமுலாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய கேள்விகள், சிக்கனமான வாகனச் செலுத்தல், விபத்தின் போது வாகனச்சாரதி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய கடமைகள், தானியங்கிய வேகமாற்றி (boîtes automatiques), மற்றும் வாகனங்களிற்கிடையிலான உந்துருளி செலுத்தல், போன்ற முக்கிய விடயங்களும், காவற்துறையினரின் சோதனைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு காணொளிகளின் அடிப்படையிலான கேள்விகளும், இந்தக் கேள்வி வங்கியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலைமையைக் காணொளியில் வழங்கி அது தொடர்பான கேள்விகள் வழங்கப்படும். கேள்விப் பரீட்சையின் போது 10% கோள்விகள், காணொளி அடிப்படையிலான கேள்விகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் பேர் கேள்விப்பரீட்சைகளில் தேர்ச்சியடைந்துள்ளனர். இது மொத்தமாகப் பரீட்சையில் பங்கு கொண்டவர்களில் 71,49% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

Nouvelle épreuve du code de la route par securite_routiere

ஐரோப்பிய நிர்வாக நடைமுறைகள்