பிரித்தானிய தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை குடிமகன்!

June 10, 2017

இலங்கைக் குடியான ரணில் ஜயவர்தன நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஹம்ப்செயர் வடக்கு, கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அவர், 37,754 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் 9,982 வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் ரணில் ஜயவர்தன 35,573 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தாகவும், இம்முறைத் தேர்தலில் அவரது வாக்கு வீதம் அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது

புலத்தில்