பிரித்தானியாவில் இன்று முதல் அதிரடி சட்டங்கள் அமுல்

April 01, 2017

பிரித்தானியாவில் முக்கிய சட்டங்கள் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

ஊதியம்

பிரித்தானியா அரசின் சார்பில் வெளிவந்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில், 25 வயதுக்கு மேற்பட்ட பணியில் இருக்கும் நபர்களுக்கு குறைந்த ஊதியம் ஒரு மணிநேரத்திற்கு £7.50 அதிகரிக்கப்பட்டுள்ளது.

18-20 வயது நபர்களுக்கு £5.60ம், 21-24 வயதுக்குள் இருக்கும் நபர்களுக்கு £7.05 என்ற அளவில் ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2020ல் இது £9ஆக உயரலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.

தனிநபர் வரி சலுகை

ஏப்ரல் 6லிருந்து தனி நபர் வரி £11,500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. £45,000 என்ற வருமானம் பெறுபவர்களுக்கு 40 சதவீதமாக வருமான வரி உயர்த்தப்பட்டுள்ளது.

ISA சலுகை

ISA சலுகை(Individual Savings Account) 6ஆம் திகதி முதல் £15,240லிருந்து £20,000மாக உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில ஓய்வூதிய திட்டம்

மாநில ஓய்வூதிய திட்டம் வரும் 6ஆம் திகதியிலிருந்து 2.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு வாரம் £155.65லிருந்து £159.55 வரை பணம் கிடைக்கும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்களுக்கு வாரம் £119.30லிருந்து £122.30 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் Prescription Charges 20 பவுண்ட் அளவிலும், தொலைக்காட்சி உரிமம் £ 147 என்ற அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல வீட்டு வசதி சலுகைகள் 18லிருந்து 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு இன்றிலிருந்து கழிக்கப்படும்.

பொதுவான வரவுகளை பொருத்தவரையில் வரும் 3ஆம் திகதி முதல் பெற்றோர்களின் இளைய பிள்ளைக்கு மூன்று வயதானவுடனே அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும். இது முதலில் 5 வயதாக இருந்தது. குழந்தைகள் காப்பக பராமரிப்பின் விலை அதிகரிப்பால் இது பெற்றோர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள் நலன்

பெற்றோர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் இதர விடயங்களுக்கு செலவிடும் 80p என்ற தொகையில் அரசு 20p தொகையை செலுத்தி விடும்.

இந்த சட்டத்தில் பணிக்கு செல்லும் 12 வயதுக்குள் குழந்தைகளுடைய குடும்பத்தாருக்கு வருடத்துக்கு £2,000 தொகையையும், உடல் ஊனமுற்ற 17 வயதுக்குள் உள்ள குழந்தைகளுடைய பெற்றோர்களுக்கு £4,000 அளிக்கபடும்.

Statutory Redundancy

வேலைக்கு அதிக ஆட்கள் இருப்பதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த நபருக்கு நிறுவனம் இரண்டு வருட சேவை ஊழிய வாராந்திர ஊதியத்தை வயது மற்றும் சேவை அளவை வைத்து வழங்க வேண்டும்.

கார் வரிகள்

மாசு ஏற்படுத்தாத மின்சார கார்களுக்கு மட்டுமே 100 சதவீத சாலை வரி விலக்கு இனி உண்டு.

CO2 மாசு விதியின் படி மற்ற கார்களுக்கு தரத்தை வைத்து வரி பெறப்படும். பின்னர் வருடத்துக்கு £140 என்ற கட்டணம் வசூலிக்கபடும்.

அதாவது சிக்கனமான சிறிய கார்களை வாங்குபவர்கள் வருடத்துக்கு £100க்கும் மேலாக தற்போது வரி செலுத்துகிறார்கள், இது அவர்களுக்கும் பொருந்தும்.

 

ஐரோப்பா