பிரித்தானியாவிலிருந்து அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

April 17, 2017

அயர்லாந்து கடவுச்சீட்டுக்காக வடக்கு அயர்லாந்து மற்றும் பிரித்தானியாவிலிருந்து விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு ஆரம்பத்திலிருந்து அயர்லாந்து கடவுச்சீட்டை பெறும் பொருட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 68 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என கடந்த ஜூன் மாதம் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, அயர்லாந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிய பின்னரும், அயர்லாந்து கடவுச்சீட்டு வைத்திருப்பவர் ஒருவருக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு தடையின்றி பயணிக்க முடியும் என்பதாலேயே குறித்த கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா