பிரித்தானியர்களின் பேஸ்புக் கடவுச்சொற்களை கேட்கும் டிரம்ப் அரசு

April 05, 2017

அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள் இனிமுதல் பேஸ்புக் கடவுச்சொற்களை டிரம்ப் அரசிடம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிரம்ப் அரசு பல்வேறு ஆணைகளை பிறப்பித்து வருகிறது. இதில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக கொண்ட 7 நாடுகளில் இருந்து எவரும் அடுத்த சில மாதங்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

மட்டுமின்றி மடிக்கணனி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் சிலவற்றுக்கும் அதிரடி தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியா உள்ளிட்ட நாட்டவர்கள் தங்களது பேஸ்புக் கடவுச்சொற்களை உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என புதிய ஆணை பிறப்பிக்க டிரம்ப் அரசு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மட்டுமின்றி குறித்த நாட்டவர்கள் தங்களின் மொபைல் தொடர்பு எண்களையும் அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும், மேலும் வருவாய் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிய வந்துள்ளது.

புதிய உத்தரவானது பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு பொருந்தும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா