பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் மக்ரோனின் கட்சிவெற்றிபெற வாய்ப்பு!

June 13, 2017

பிரான்ஸ் நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் மக்ரோனின் கட்சி வரலாறு காணாத பெரும்பான்மை பெரும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், புதிய அதிபராக இம்மானுவல் மக்ரோன் தேர்வு செய்யப்பட்டார்.

அந்நாட்டில் இளம் வயதில் அதிபராக பொறுப்பேற்றுள்ள அவர், 2016-ல் En Marche என்ற கட்சியை துவக்கி, பாரம்பரிய கட்சிகளை பின்னுக்கு தள்ளியிருப்பது பிரான்ஸ் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கு நேற்று முன்தினம் முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

இதில் மிக குறைவாக 48.7 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. அதிபர் மக்ரோனின் கட்சி 32.3 சதவீத வாக்குகளை பெற்றது. வலதுசாரி குடியரசுக் கட்சிக்கு 21.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. மற்ற கட்சிகள் அனைத்தும் மிக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன.

முதுற்கட்ட தேர்தலில் 4 தொகுதிகளில் மட்டுமே 50 சதவீத வாக்குகளை பெற்று 4 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்ற தொகுதிகளில் வரும் 18-ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 2012-ம் ஆண்டு நடைபெற்ற முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலில் 57.2 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை அது 48.7 சதவீதமாக சரிந்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பின் மக்ரோனின் கட்சி மொத்தமுள்ள 577 இடங்களில், 440-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றக் கூடும் என எதிர்பார்கக்ப்படுகிறது. அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் பிரான்ஸில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

புலத்தில்