பிரான்ஸ் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!

June 20, 2017

பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ‘மிஸ்ரல்’ (Mistral), ‘ஹோபட்’ (Courbet) என்ற இரு கப்பல்கள் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

இலங்கை கடற்படை மரபுகளுக்கமைவாக குறித்த இரு கப்பல்களையும் கடற்படையினர் வரவேற்றனர்.மிஸ்ரல் கப்பல்களில் 56 அதிகாரிகள் உள்ளடங்கலாக 431 பேரும் ஹோபட் கப்பலில் 18 அதிகாரிகள் உள்ளடங்கலாக 157 பேர் பணியாற்றுகின்றனர்.

இக்கப்பல் இம்மாதம் 27ம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும்.இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடுசெய்யபட்டுள்ள பல்வேறு நிகழ்வுகளில் இவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தீவு