பிரான்ஸில் பயங்கர தீவிபத்து: பதற வைக்கும் வீடியோ காட்சி

April 03, 2017

பிரான்ஸின் பாரீஸில் நடந்த கேளிக்கை திருவிழாவின் போது தீ விபத்து ஏற்பட்டத்தில் 18 பேர் காயமடைந்தனர்.

பிரான்ஸின் பாரீஸில் உள்ள Villepinteல் கேளிக்கை திருவிழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சிறுவர்கள் முதலில் பாரம்பரிய அணிவகுப்பு நடத்தினார்கள்.

பின்னர் ப்ளைவுட் மரத்தால் ஆன ஒரு பெரிய கொடும்பாவி அங்கு வைக்கப்பட்டது. அதில் ஒருவர் தீ வைத்த போது அது பயங்கரமாக வெடித்து சிதறியது.

இதில் அங்கு இருந்த 18 பேருக்கு காயம் ஏற்பட்டது, அதில் 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று சிறுவர்களும் அடக்கம்.

ஆனாலும் யார் உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. இதுகுறித்து பொலிசார் கூறுகையில், பிளைவுட் மரத்தால் ஆன கொடும்பாவியில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர்.

அதன் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது, இது குறித்து மேலும் விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Videos: 
ஐரோப்பா