பிரான்சில் தொழிலாளர்களுக்கான கட்டாய மருத்துவக் காப்பீடு

January 02, 2016

பிரான்சில் இந்த வருடம் (2016) ஜனவரி மாதம் முதல், நீங்கள் பணிபுரியும் நிறுவனங்கள், உங்களிற்கான மேலதிக மருத்துவக் காப்பீடான mutuelleனை வழங்கும் கட்டாயத்திற்கு உள்ளாகுகின்றார்கள்.

தனியார் நிறுவனங்கள், சிறு நிறுவனங்கள் என அனைத்துமே, தங்களின் தொழிலாளர்களின் எண்ணிக்கை எதுவானாலும், ஒருவராக இருந்தாலும் கூட, அவரிற்கான மேலதிக மருத்துவக் காப்பீட்டை கட்டாயமாக வழங்கவேண்டும்.

நிறுவனங்களிற்கான மருத்துவக்காப்பீட்டின், ஒரு பகுதி நிறுவனத்தினாலும், சிறியதொரு பகுதி தொழிலாளராலும் செலுத்தப்படும். இதன் முக்கியமான காரணம், உங்களின் மருத்துவச் செலவுகளை 100% தேசிய மருத்துவக் காப்பீடான Assurance maladie (sécurité sociale) இனாலும் mutuelle இனாலும்  பொறுப்பேற்க வைப்பதேயாகும். தொழிலாளிகளை  இந்த மருத்துவச்சுமைக்குள் சிக்கவிடாமல் காப்பாற்றுவதே இதன் நோக்கமாகும்

இந்தக் காப்புறுதியை வழங்குவது ஒவ்வொரு முதலாளிகளினதும் நிறுவனங்களினதும் கட்டாயக் கடமையாகும். இந்தக் காப்புறுதியை ஒரு முதலாளி வழங்கத் தவறினால் அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளி, சுவவீனத்திற்குள்ளாகி, அவரிற்கான மருத்துவச் செலவுகள், எத்தனை ஆயிரங்களானாலும், அதனைப் பொறுப்பேற்கவேண்டிய கட்டாயத்திற்குள் அந்த முதலாளி, சட்டத்தினால் தள்ளப்படுவார். அது 50.000€ ஆனாலும் கூட அதைச் செலுத்தியே ஆகவேண்டும்.

எனவே பெருநிறுவனங்கள் மாத்திரமல்லாமல், சிறு முதலாளிகள் கூட, நிறுவனங்களிற்கான இந்த மருத்துவக் காப்பீட்டை (mutuelle) இணைத்துக் கொள்வது மிகவும் அவசியமாகின்றது.

ஐரோப்பிய நிர்வாக நடைமுறைகள்