பிரான்சில் தமிழர்கள் மீது தாக்குதல்

March 20, 2016

பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் நேற்று ஆரம்பமாக இருந்த வேளையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அவரது வீட்டிற்கு முன்னால் வன்முறையாளர்களின் கடும் தாக்குதலுக்கு இலக்காகி  மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தொிவிக்கின்றனர்.

இதே வேளை பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறைப் பொறுப்பாளரும், விளையாட்டு மைதானத்தில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். விளையாட்டு மைதானத்தில் தாக்குதல் மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்சில் உள்ள விளையாட்டுக் கழகங்களில், 21 கழகங்கள் இச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றவுள்ள நிலையில், இத்தாக்குதல் இடம் பெற்றுள்ளதுடன் இப்போட்டிகள் அனைத்தும் ஈழ விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,

நேற்று காலை பிரான்ஸ் வியைளாட்டுத்துறைப் பொறுப்பாளர், இந்த வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு, முதலுதவிப்படையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரைப் பார்க்க வைத்தியசாலைக்குச் சென்ற தேசியச் செயற்பாட்டாளர்கள், வைத்தியசாலையின் முன்றலில் வைத்து, இதே கும்பலால் தாக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட வன்முறையாளன் ஒருவர், பிரான்ஸ் காவற்துறையினரால் அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் . மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன பிரான்ஸ் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலத்தில்