பிரான்சின் அறிவிப்பு - பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்பும் புதிய வழி!

February 17, 2016

பிரான்சில் கடந்த நவம்பர் 13ம் திகதியப் பயங்கரவாதத் தாக்குதல் நடந்ததில் இருந்து, பயங்கரவாதத் தாக்குதலில் மக்கள் காப்பாற்றப்படுவதற்கான பல நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

2015 நவம்பர் தாக்குதல் நடந்து சில கிழமைகளில், பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என பத்தக்லோன் தாக்குதலையும், மாலி விடுதித் தாக்குதலையும், அடிப்படையாகக் கொண்டு, ஒரு வரைபடத்தை வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது ஒரு காணொளியை பிரெஞ்சு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதில் பங்கரவாதத் தாக்குதலில், முதற் செயலாக அதிலிருந்து தப்புவதே முக்கியமானது, என்பதுடன் தப்புவது சாத்தியமற்றதாகில், பாதுகாப்பான முறையில் பதுங்கியிருக்கவேண்டும், என்பது போன்ற பல அறிவுரைகள், காணொளியுடன் உரைவடிவில் வெளியாகி உள்ளன.

 

ஐரோப்பிய நிர்வாக நடைமுறைகள்