பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்

March 07, 2016

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கலாபவன் மணி. மிமிக்ரி கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய இவர் அக்ஷரம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார். 200க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்ல பாடகராகவும் இருந்துள்ளார். 1 படத்திற்கு இசையமைத்தும் உள்ளார்.

சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான இவர் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் ஜெமினிபடத்திலும், கடந்த வருடம் வெளிவந்த பாபநாசம் படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார்.

45 வயதான இவர் கடந்த சில நாட்களாக கல்லீரல் பாதிப்பால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று இரவு 7.15 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகத்தினர் இடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சினிமா