பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

July 25, 2017

யாழ். மேல் நீதீமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.  நீதீமன்ற நீதவான் எஸ். சதீஸ்தரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

யாழ். நீதீமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரனின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து கடந்த சனிக்கிழமை மாலை நல்லூர் பின் வீதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் இன்றைய தினம் காலை வேளையில் பிரதான சந்தேகநபர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஈழத்தீவு